• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
லோஹோர் சீமாட்டி கடன் நிதிய சட்டத்திலுள்ள பிரிவுகளைத் திருத்துதல்
- அரசாங்க ஊழியர்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் லோஹோர் சீமாட்டி கடன் நிதியம் 1927 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது வருடாந்தம் சுமார் 400 மில்லியன் ரூபா சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடனாக வழங்கப்படுகின்றது. இந்த நிதியத்தை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அதன் கணக்காய்வு பணிகளை கணக்காய்வாளர் அதிபதியின் மேற்பார்வையின் கீழ் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1951 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க லோஹோர் சீமாட்டி கடன் நிதிய சட்டத்திலுள்ள உரிய பிரிவுகளைத் திருத்தும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.