• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் பூகோள ரீதியிலான பாதுகாப்பு பற்றிய நன்மதிப்பை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த சுற்றுலா டிஜிட்டல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்
- சுற்றுலா தொழிலின் மூலம் தற்போது கிடைக்கப்பெறும் 3.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட வருமானத்தை 2020 ஆம் ஆண்டளவில் 7.0 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துக் கொள்தல், சுற்றுலா தொழிலின் உள்நாட்டு தொழில் வாய்ப்புகளை 600,000 வரை அதிகரித்தல் மற்றும் உல்லாச பயணிகளின் நாளொன்றுக்கான செலவினை 210 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல் போன்ற நோக்கங்களை பூர்த்தி செய்வதற்காக "இலங்கை சுற்றுலா திறமுறைத் திட்டம் - 2017 - 2020” நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் முழு மொத்த சுற்றுலா அனுபவத்தினை மேம்படுத்துதல், சுற்றுலா துறையின் வளர்ச்சி மற்றும் பூகோள ரீதியிலான பாதுகாப்பு பற்றிய நன்மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் தேசிய மட்ட தொழினுட்ப தீர்வுமுறையொன்றாக "ஒருங்கிணைந்த சுற்றுலா டிஜிட்டல் நடவடிக்கைகள்" என்பதனை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உத்தேச தீர்வானது இணைந்த சுற்றுலா ஆய்வு, கூட்டு பூகோள விமான கம்பனிகளின் தகவல்களை ஒன்றிணைத்தல், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை ஆராய்தல், ஒன்றிணைந்த சுற்றுலா காப்புறுதி உட்பட பாதுகாப்பினை உறுதிசெய்தல் போன்ற மூன்று பிரதான ஆக்கக்கூறுகளைக் கொண்டுள்ளது. இதற்கமைவாக உத்தேச ஒருங்கிணைந்த சுற்றுலா டிஜிட்டல் வழிமுறையை அரசாங்க மற்றும் தனியார் பங்குடைமை அடிப்படையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.