• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொலன்னாவை பிரதேசத்தில் வௌ்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல்
- 2016 ஆம் ஆண்டில் பெய்த கடும் மழை காரணமாக களனி கங்கை பெருக்கெடுப்பு மற்றும் மழைநீர் முறையாக வழிந்தோடாமை போன்ற காரணங்களினால் கொலன்னாவை பிரதேச செயலக பிரிவிற்குரிய சில பிரதேசங்கள் வௌ்ளப்பெருக்குக்கு ஆளாகின. இந்த வௌ்ளப்பெருக்கினால் சேதமடைந்த சில வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் நட்டஈடு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நட்டஈட்டின் மூலம் உள்வாங்கப்படாத வௌ்ளப்பெருக்கினால் சேதமடைந்த மேலும் வீடுகளுக்கு நட்டஈடு செலுத்துவது அவசியமாகும். இவற்றுள் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ள 1,070 வீட்டு அலகுகள் சார்பில் நட்டஈடு செலுத்தும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.