• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகோவிலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரப் பாதையை புனரமைத்தல்
- வட மாகாணத்திற்கு வினைத்திறன்மிக்கதும் பாதுகாப்பானதும் வசதியானதுமான பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தினை மேற்கொள்ளும் எதிர்பார்ப்பில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் புகையிரம் செல்லக்கூடிய விதத்திலும் கூடிய எடையினை தாங்கக்கூடிய விதத்திலும் புகையிரத பாதையினை நிர்மாணிக்கும் பொருட்டு மாகோவிலிருந்து ஓமந்தை வரை 128 கிலோ மீற்றர்கள் நீளமான புகையிரத பாதையை இந்திய நிதி உதவியுடன் புனரமைப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க இந்த பாதையை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 91.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு M/s Ircon International Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.