• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பத்தரமுல்லை Waters Edge Ltd., சார்பில் 48 அறைகளைக் கொண்ட ஹோட்டலினை நிர்மாணித்தல்
- பத்தரமுல்லை Waters Edge ஹோட்டல் தற்போதுள்ள மனையிடத்திலேயே 48 அறைகளைக் கொண்ட நகர சிறிய சொகுசு ஹோட்டலொன்றினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 1,288.7 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Sathuta Builders (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.