• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடத்திற்கான கட்டடத்தொகுதியின் நிர்மாணிப்பு
- இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடத்திற்கான கட்டடத்தொகுதியை அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியத்தின் நிதியுதவியுடன் 7,978 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த முதலீட்டின் கீழ் மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான கட்டட நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 2,887.95 மில்லியன் ரூபாவைக் கொண்ட (வரியற்ற) தொகைக்கு M/s. International Construction Consortium (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.