• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி பல்கலைக்கழகத்தின் பாளி, பௌத்த கல்வி பட்டப்பின் படிப்பு நிறுவகத்திற்கு நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணித்தல்
- 1975 ஆம் ஆண்டில் களனி பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட பாளி, பௌத்த கல்வி பட்டப்பின் படிப்பு நிறுவகத்திற்கு போதுமான இடவசதியினை வழங்கும் பொருட்டு நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதன் முதலாம் கட்ட நிர்மாணிப்பு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 393 மில்லியன் ரூபாவுக்கு M/s Sathuta Builders (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.