• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச கடல்சார் அமைப்பின் (IMO) சமவாயத்திற்கு அமைவாக 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தை திருத்துதல் (விடய இல.43)
- சருவதேச கடல்சார் அமைப்பின் (IMO) உறுப்பு நாடுகளானவை கூறப்பட்ட அமைப்பினால் விதிக்கப்படும் மிகமுக்கியமான கட்டாய சமவாயத்திற்கு அமைவாக செயலாற்ற வேண்டும். அதற்கிணங்க, சருவதேச கடல்சார் அமைப்பின் (IMO) சமவாயத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு சட்டத்தை ஆக்கும் பொருட்டு இலங்கையின் வணிக கப்பற் செயற்பாடுகளையும் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து செயற்பாடுகளையும் ஒழுங்குறுத்தும் 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தை திருத்துவதற்கென தயாரிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்தை அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன் பின்னர் அதனை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.