• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழில் ஒழுங்குறுத்தல் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கான திருத்தங்கள்
- இலங்கை காப்புறுதி சபையினை தாபிப்பதன் மூலம் காப்புறுதி தாரர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் தொழில் ரீதியானதும் மதிநுட்பமானதுமான விதத்தில் காப்புறுதி தொழில் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துதல் பற்றிய குறிக்கோளுடன், இலங்கையில் காப்புறுதி தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் ஒழுங்கு முறைப்படுத்துவதற்குமென 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழில் ஒழுங்குறுத்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கிணங்க, காப்புறுதி ஆவணதாரர் ஒருவரினால் இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவிற்கு வருடாந்த கட்டணங்களை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2018 12 31 ஆம் திகதியிடப்பட்டதும் 2104/9 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.