• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் பைனஸ் வன செய்கையை உள்நாட்டு மர வகைகளுடன் கூடிய வன வளர்ப்பாக மாற்றியமைப்பதற்காக நிலைபேறுடைய வன முகாமைத்துவம் மற்றும் புனரமைப்பு பற்றிய ஆசிய பசுபிக் வலயமைப்புடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
- பைனஸ் செய்கைகளுக்கு அருகாமையில் உள்நாட்டு விசேட மர வகைகளை செய்கைப்பண்ணுவதன் மூலம் துணை நடுகைகளாக அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நீரேந்தற் பிரதேசங்களிலுள்ள வனச் செய்கைகளின் மணல் மற்றும் நீர் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் உயிரின பல்வகைமை தன்மையை விருத்தி செய்வதற்கும் பெற்றுக் கொள்ளக்கூடிய பங்களிப்பை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கையில் தற்போதுள்ள பைனஸ் வன செய்கையை உள்நாட்டு மர வகைகளுடன் கூடிய வன வளர்ப்பாக மாற்றியமைப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வன நிலைபேறுடைய முகாமைத்துவம் மற்றும் புனரமைப்பு பற்றிய ஆசிய பசுபிக் வலயமைப்பின் மானியக் கொடைகளின் கீழ் எதிர்வரும் 3 வருட காலப்பகுதிக்குள் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.