• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுபாட்டுச் சபையின் உனவட்டுன சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம் அமைந்துள்ள காணியை கூறப்பட்ட சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளல்
- காலி மாவட்டத்தின் உனவட்டுன பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுபாட்டுச் சபையின் புனர்வாழ்வு நிலையமானது போதைப் பொருளுக்கு அடிமையாகியவர்களுக்கு விசேட வதிவிட சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதுடன், அதன் மூலம் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை பெறுமதிவாய்ந்த பிரசைகளாக சமூகமயப்படுத்துகின்றது 1990 ஆம் ஆண்டில் சமுதாய சிகிச்சை முகாமொன்றாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையமானது 1991 ஆம் ஆண்டிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக வதிவிட புனர்வாழ்வு நிலையமொன்றாக நடாத்தப்பட்டு வருகின்றது. ஒரே தடவையில் 35 வதிவிடதாரிகளுக்கான தங்குமிட வசதியை இந்த நிலையத்தின் மூலம் கொடுக்கக்கூடியதாக இருக்கின்ற போதிலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் காத்திருப்பு பட்டியலில் 50 இற்கும் கூடுதலான ஆட்கள் உள்ளனர். இந்த நிலையம் அமைந்துள்ள காணியானது சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கு சொந்தமாகவுள்ள போதிலும் இந்த நிலையத்திற்கு ஊடாக எதிர்பார்க்கப்படும் சேவைகளுக்கான கேள்விகளை பூர்த்தி செய்வதற்கு புதிய நிர்மாணங்களை மேற்கொள்ளும் சாத்தியப்பாடு எதுவுமில்லை. ஆதலால், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுபாட்டுச் சபையின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம் அமைந்துள்ள காணியை கூறப்பட்ட சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.