• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரத சேவைக்கு 75 பயணிகள் பெட்டிகள் மற்றும 20 சரக்கு பெட்டிகள் (fiat bed) வழங்குவதற்கான கேள்வி
- தற்கால தொழினுட்ப போக்குகளுடன் பொருந்தும் பொருட்டு இலங்கை புகையிரத திணைக்களமானது தற்போது பிரதான தொழினுட்ப நிலைமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றது. அதற்கிணங்க, இம் முயற்சியின் ஊடாக தொடர்வண்டி இழுபொறித் தொகுதிகளின் நிலையினை விருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை புகையிரத சேவைகள் சார்பில் மலையக புகையிரத சேவைகளுக்கு 50 அடி கொண்ட 75 பயணிகள் பெட்டிகளையும் அத்துடன் 20 சரக்கு பெட்டிகளையும் (fiat bed) இந்தோனேஷிய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் நிதியுதவியின் கீழ் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை, இந்தோனேசிய அரசாங்கத்திற்கு சொந்தமான PT Industri Kereta Api (PT INKA) நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.