• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய 37 சொகுசு பேருந்துகளை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்தல்
- பொது போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தி பயணிகளுக்கு கூடுதல் தரமான சேவையை வழங்கும் நோக்குடன், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய 37 சொகுசு பேருந்துகளை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை M/s Softlogic Automobile (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.