• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டு மே மாதத்திற்குத் தேவைப்படும் பசளையை கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு இணங்க, வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizer Company Ltd., நிறுவனம் ஆகியவற்றின் இரசாயன பசளைத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் பொருட்டு, 8,000 மெற்றிக் தொன் யூரியாவை மெற்றிக் தொன் ஒன்று 302.54 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்திலும், 8,900 மெற்றிக் தொன் Muriate of Potashஐ மெற்றிக் தொன் ஒன்று 343.74 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்திலும், 2,000 மெற்றிக் தொன் Muriate of Potashஐ (சிகப்பு / இளஞ்சிகப்பு) மெற்றிக் தொன் ஒன்று 343.74 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்திலும் M/s Valency International Trading (Pvt.) Ltd., நிறுவனத்திலிருந்து கொள்வனவு செய்வதற்கு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.