• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆழ்கடலில் மணல் அகழ்வதற்காக DREDGER இயந்திரமொன்றை கொள்வனவு செய்தல்
- நிர்மாண நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆற்று மணலின் பற்றாக்குறை காரணமாக, மாற்று பொருளாக பயன்படுத்தப்படும் கடல் மணலுக்கான கேள்வி அதிகரித்து வருகின்றது. தீர்வு நடவடிக்கையொன்றாக, இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனமானது நிர்மாண நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடிய விதத்தில் கடல் மணலை சுத்திகரித்து வழங்குகின்றது. இச் செயற்பாடானது தற்போது நிர்மாண கைத்தொழிலின் மொத்த மணல் தேவைப்பாட்டின் 10 சதவீதத்திற்கும் குறைவானதையே சமாளிக்கின்றது. ஆதலால், நிர்மாண கைத்தொழிலின் அபிவிருத்தியுடன் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் மணலுக்கான உயர் கேள்வியினை பூர்த்தி செய்வதற்கு ஆழ்கடலில் மணலை அகழ்வதற்காக DREDGER இயந்திரமொன்றை கொள்வனவு செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.