• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளத்திலுள்ள நிலக்கரி மின் நிலையத்திற்காக நிலக்கரியை கொள்வனவு செய்தல்
- உடனடி கேள்வி நடைமுறையின் கீழ் புத்தளத்திலுள்ள நிலக்கரி மின் நிலையத்திற்குத் தேவைப்படும் நிலக்கரியை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, ஒரு மெற்றிக்தொன் 81.87 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் கூறப்பட்ட மின் நிலையத்திற்காக 300,000 மெற்றிக் தொன் நிலக்கரியை M/s Adani Global Pte. நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.