• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச தாராளமயப்படுத்தப்பட்ட வர்த்தகத்தின் நன்மைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வர்த்தக சீராக்கல் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- சர்வதேச தாராளமயப்படுத்தப்பட்ட வர்த்தகத்தின் போட்டித் தன்மைக்கூடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகளை அதிகரிக்கும் பொருட்டு, இத்துறையில் சம்பந்தப்படும் தரப்பினர்களின் பரந்துபட்ட பங்களிப்புடன் முழுமையான வர்த்தக சீராக்கல் நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கத்தை ஆக்கத்திறன் வாய்ந்த விதத்தில் இயலுமைப்படுத்தும் குறிக்கோளுடன், வர்த்தக சீராக்கல்களை சிபாரிசு செய்யும் வர்த்தக மற்றும் உற்பத்தித்திறன் ஆணைக்குழுவையும் கூட்டு வழிப்படுத்தல் குழுவொன்றையும் சுயாதீன அமைப்புகளாக தாபிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.