• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1982 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க வக்குப் சட்டத்தை காலத்திற்கேற்ப இற்றைப்படுத்துதல்
- நாடுமுழுவதும் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய புண்ணிய நம்பிக்கை பொறுப்புக்கள் ஆகியவற்றின் நிருவாகத்தில் காணப்படும் பிரச்சினைகளையும் பிணக்குகளையும் தீர்ப்பதற்குத் தேவையான சட்ட வழிகாட்டல்களை செய்வதற்கும் வக்குப் சபை மற்றும் வக்குப் நியாயசபை ஆகிய நிறுவனங்களின் முறையான செயற்பாடுகளின் சார்பில் நடைமுறையிலுள்ள வக்குப் சட்டத்தை காலத்தின் தேவைக்கு ஏற்ப இற்றைப்படுத்துவதற்கு தேவையான திருத்தங்களை பரிசீலனை செய்யும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.