• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலைகள் ஊடாக கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
- 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில்சார் பாடங்களை கற்கும் மாணவர்கள் இரண்டாவது கல்வி ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட தொழில்சார் பாடத்திற்குரிய தேசிய தொழில்சார் ஆற்றல் (NVQ) 4 ஆம் மட்ட சான்றிதழை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிறுவனமொன்றினால் கல்வி கற்றல் வேண்டும். இத்தகைய பயிற்சி நிறுவனங்கள் பெரும்பாலானவை பிரதான நகரங்களில் அமைந்திருத்தல் சில பயிற்சி நிறுவனங்கள் ஒரு இடத்தில் மாத்திரம் இருத்தல் என்பன காரணமாக சில மாணவர்கள் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொள்ளும் போது அதிக செலவினை ஏற்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பாடசாலைகள் ஊடாக கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து உட்பட ஏனைய செலவுகளை தழுவுவதற்காக நாளொன்றுக்கு 500/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றை வழங்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.