• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்ககூடிய விதத்தில் சலுகைக் காலமொன்றை வழங்குவதற்காக காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை மீணடும் நடைமுறைப்படுத்தல்
- கடந்த காலத்தில் நிலவிய மோதல் காரணமாக காணி உட்பட நிலையான சொத்துக்களை மீள பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றங்களின் முன் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியாமற் போனவர்களுக்கு விசேட சட்ட ஏற்பாடுகளை செய்யும் நோக்கில் 2016 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் காலவிதிப்பு கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் மூலம் விதிவிலக்களிக்கப்படுவதோடு, இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து இரண்டு வருட காலப்பகுதிக்குள் நீதிமன்றம் ஒன்றில் வழக்கொன்றினை தொடுப்பதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் பெறும். வழக்கொன்றை தொடுப்பதற்காக மோதல் நிலவிய காலத்தில் காணாமற்போன ஆவணங்களை மீண்டும் தயாரித்துக் கொள்வதற்கு அல்லது காணிகளின் உரிமை சம்பந்தமாக சாட்சிகளை தயாரித்துக் கொள்வதற்கு மற்றும் இந்த சட்டம் தொடர்பில் உரியவர்கள் அறிந்து கொள்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலத்தை மேலும் மூன்று (03) வருட காலத்தால் நீடிப்பதற்காக காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை மீள விதிப்பதற்காக சட்டத்தினை வரையும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.