• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கரும்பு இனப்பெருக்க பொருட்களை பரிமாறிக் கொள்ளல் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
- பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கரும்பு இனப்பெருக்க பொருட்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் பரஸ்பரம் இரு நாடுகளினாலும் அடையக்கூடிய நன்மைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கையின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் பாகிஸ்தான், பைசலாபாத் கரும்பு ஆராய்ச்சி அபிவிருத்தி சபை மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.