• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ராஜகிரிய Ceremonial Drive பிரதேசத்தில் நடுத்தர வருமானம் பெறும் தொழில் சார்பாளர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டமொன்றை நிர்மாணித்த
- அரசாங்க மற்றும் தனியார் துறையில் சேவை புரியும் அத்துடன் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஏற்கக்கூடிய விலைக்கு 500,000 வீட்டு அலகுகளை வழங்கும் கருத்திட்டமொன்று அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். அதன் கீழ் ராஜகிரிய Ceremonial Drive பிரதேசத்தில் 177 வீட்டு அலகுகளைக் கொண்டதும் ஏனைய வசதிகளை உள்ளடக்கியதுமான வீடமைப்புக் கருத்திட்டமொன்றை அரசாங்க தனியார் பங்குடமையின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.