• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் காணி உடைமை மாற்றம் என்பவற்றின் மீது அறவிடப்படும் முத்திரை தீர்வைகளை உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு கிடைக்கப் பெறுவதலை ஒழுங்குமுறைப்படுத்தலும் துரிதப்படுத்தலும்
- உள்ளூராட்சி அதிகாரசபை அதிகார பிரதேசத்திலுள்ள நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் காணி உடைமை மாற்றம் செய்வதற்காக எழுதி உறுதிப்படுத்தப்படும் உறுதிகள் மீது அறிவிடப்படும் முத்திரைத் தீர்வை கட்டணங்களிருந்து சேர்க்கப்படும் வருமானத்தை குறித்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக தற்போது நடைமுறையிலுள்ள வழிமுறையினை வினைத்திறன் மிக்கதாக மாற்றும் நோக்கில் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 19 ஆம் பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் ழவங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இந்த சட்டமூலம் சம்பந்தமான கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு அரசியலமைப்பின் 154 எ உறுப்புரையின் பிரகாரம் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் மாகாண சபைகளுக்கு தொடர்புபடுத்தி திருத்தங்கள் எதுவுமிருப்பின் அவற்றையும் உள்ளடக்கி தயாரிக்கப்படும் சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.