• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரிய மருத்துவ அறிவை பாதுகாக்கும் கருத்திட்டம் - கட்டம் II
- தொற்றா நோய்கள் அதேபோன்று ஏனைய நோய்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் பொருட்டு எமது பாரம்பரிய மருத்துவ முறை ஏதுவாய் அமைந்துள்ளமைக்கு சாட்சிகள் நிலவுகின்றன. ஆதலால், பாரம்பரிய மருத்துவ முறையை பாதுகாக்கும் மற்றும் பிரபல்யப்படுத்தும் முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தற்போது அழிவுற்றுவரும் பாரம்பரிய மருத்துவமுறை மற்றும் மருத்துவ அறிவினை பாதுகாப்பதற்கான கருத்திட்டத்திட்டமொன்றை ஆயுள்வேத திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நடவடிக்கையின் கீழ் சுமார் 2.500 மருத்துவர்களின் தகவல்களை திரட்டி தரவுமுறைமையொன்றைத் தயாரித்தல், பழைய நூலகம் மற்றும் ஏடுகள் காப்பகத்தை நவீனமயப்படுத்தல், சுமார் 400 ஏடுகளை பாதுகாத்து ஆவணப்படுத்தல், பாரம்பரிய மருத்துவ அறிவினை பாதுகாப்பதற்குரிய சட்டங்களைத் தயாரித்தல் மற்றும் டிஜிட்டல் நூலகங்களுக்கு தேவைப்படும் கட்புல செவிப்புல பிரிவொன்றைத் தாபித்தல் போன்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் இரண்டாம் கட்டமாக பழமைவாய்ந்த சிகிச்சைகள், பராமரிப்பு முறைகள் மற்றும் செயற்பாட்டு முறைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும், பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆராய்ந்து விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துவதற்கும், இந்த மருத்துவ முறையை எதிர்கால சந்ததியினருக்கு உரிமையாக்கிக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக 350 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டுடன் மையப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டக் கட்டமைப்பிற்குள் இந்த இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.