• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆறு (06) மாடிகளைக் கொண்ட முன் சிகிச்சைசார் மற்றும் துணை சிகிச்சைசார் கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல்
- 1979 ஆம் ஆண்டில் முதலாவது மாணவர் குழுவாக 65 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடமானது தற்போது 937 மாணவர்கள் கல்வி கற்கும் பீடமொன்றாக வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது பல்லின அடிப்படையில் வருடாந்தம் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் அதற்கு ஒருங்கிணைவாக அவர்களுக்கு வசதிகளை வழங்கக்கூடிய விதத்தில் விரிவுரை மண்டபங்கள், ஆய்வுகூடங்கள், வகுப்பறைகள், விடுதி இடவசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அடையவில்லை. இலங்கை ஞானம் மன்றத்தின் ஊடாக 740 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டுடன் கூடிய நவீன வசதிகளுடனான 6,500 சதுர மீற்றர்கள் கொண்ட ஆறு (06) மாடி கட்டடமொன்றை நிர்மாணித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு ஐக்கிய இராச்சியத்தின் லைக்கா கூட்டு தொழில்முயற்சியானது உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, உரிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காகவும் இதற்குரிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.