• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுகர்வோருக்கும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் சலுகையளிப்பதற்காக ஆக்கப்பட்ட விசேட வியாபார பண்டங்கள் வரியினை விதிப்பதற்காக வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள்
- 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் வரிச்சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களுக்கு இந்த சட்டத்தின் 7(iii) ஆம் பிரிவின் கீழுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக, கூடிய விரைவில் பிரேரணையொன்றின் மூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும். இதற்கமைவாக, நுகர்வோருக்கும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் சலுகையளிப்பதற்காக ஆக்கப்பட்ட விசேட வியாபார பண்டங்கள் வரியினை விதிப்பதற்குரியதாக வௌிப்படுத்தப்பட்டுள்ள 2019‑01‑03 ஆம் திகதியிடப்பட்டதும் 2104/30 ஆம் இலக்கத்தைக் கொண்டதும், 2019‑02‑01 ஆம் திகதியிடப்பட்டதும் 2108/65 ஆம் இலக்கத்தைக் கொண்டதும், 2019‑02‑07 ஆம் திகதியிடப்பட்டதும் 2109/15 ஆம் இலக்கத்தைக் கொண்டதும் 2019‑02‑08 ஆம் திகதியிடப்பட்டதும் 2109/20 ஆம் இலக்கத்தைக் கொண்டதும், 2019‑02‑24 ஆம் திகதியிடப்பட்டதும் 2111/58 ஆம் இலக்கத்தைக் கொண்டதும், 2019‑03‑02 ஆம் திகதியிடப்பட்டதும் 2112/48 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமரப்பிப்பதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.