• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடமொன்றை தாபிப்பதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
- தரம் மிக்க பயிற்சி பெற்ற சுகாதார தொழில்சார்பாளர்களை உருவாக்குவதன் மூலம் உயர் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை நாட்டில் விரிவுபடுத்தி, உயர்தர பரீட்சையில் தகைமைகளை பூர்த்தி செய்த திறமைமிக்க மாணவர்களுக்கு தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் நுழைவதற்கு உள்ள வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்குடன் 70.46 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டின் கீழ் சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்றை தாபிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான கருத்திட்டத்தை மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த முதலீட்டில் 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் சலுகை கடன் தொகைகளாகவும் மீதி 20.46 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அரசாங்கத்தினாலும் வழங்கப்படவுள்ளன. இதற்கமைவாக, சப்பிரகமுவ மருத்துவ பீடத்தை தாபிக்கும் கருத்திட்டத்தின் பிரதான பீட கட்டடத்தை நிர்மாணித்தல் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்தல் உள்ளடக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட சலுகை கடன் தொகையொன்றை அபிவிருத்திக்கான சவுதி நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு கடன் உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.