• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுவரெலியா உயர் பகுதி விளையாட்டு பயிற்சி கட்டடத்தொகுதியினை நிர்மாணிப்பதற்காக நிதியுதவி பெற்றுக்கொள்ளல்
- உயர் பகுதி விளையாட்டு பயிற்சி விளையாட்டு வீரர்களின் சுவாசப்பை ஆற்றலை அதிகரிப்பதற்கு காரணமாக அமைவதோடு, அது விளையாட்டு வீரர்களின் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் உடல் வலிமையையும் அதிகரித்துக் கொள்வதற்கும் ஏதுவாய் அமையும். இதன் மூலம் சர்வதேச மட்டத்தில் ஆற்றலை வௌிப்படுத்தி வெற்றிகளைப் பெறும் சாத்தியம் அதிகரிக்குமென இனங்காணப்பட்டுள்ளது. உயர் பகுதி விளையாட்டு பயிற்சி நிலையமொன்றை கடல் மட்டத்திலிருந்து 1,500 - 3,500 மீற்றர் உயரத்தில் தாபிக்கப்படுதல் வேண்டும். தற்போது ஆசியாவிலேயே உயரத்தில் கூடிய அத்தகைய பயிற்சி நிலையமொன்று 1,899 மீற்றர் உயரத்தில் சீனாவில் தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கையின் இயற்கை அமைவினை பயன்படுத்தி நுவரெலியா பிரதேசத்தில் 1,895 மீற்றர் உயரம் கொண்ட இனங்காணப்பட்டுள்ள காணியில் பயிற்சி கட்டடத்தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதியினை ஏற்றுமதி கடன் வசதியின் கீழ் ஐக்கிய இராச்சியத்தின் ஏற்றுமதி நிதி நிறுவனத்தினால் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த ஏற்றுமதி கடன் வசதிகளின் மூலம் தழுவப்படாத கருத்திட்ட பெறுமதியினை நிதியிடுவதற்குத் தேவையான நிதியினை வழங்குவதற்கு மக்கள் வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, இதற்கிணங்க, இந்த வங்கியுடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்தும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.