• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹிங்குரக்கொட தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தை தாபிப்பதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
- இலங்கையில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு பயனுள்ள தொழில் வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு தரமிக்க தொழிற்கல்வி மற்றும் பயிற்சியினை இளம் சமூகத்திற்கு வழங்கும் தேவை அரசாங்கத்தினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக, பொலன்நறுவை ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஹிங்குரக்கொட தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தை 35 மில்லியன் யூரோ கொண்ட நெதர்லாந்து சலுகை நிதியின் கீழ் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 9.7 மில்லியன் யூரோ உதவி உள்ளடக்கப்பட்ட சலுகை கடன் தொகையின் கீழ் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நெதர்லாந்தின் Cooperative Rabobank U.A நிறுவனத்துடன் கடன் உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.