• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையை நிலக்கண்ணிவெடியற்ற நாடாக பிரகடனப்படுத்துதலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியினை வழங்குதலும் (விடய இல.09)
- வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களின் பெறுபேறாக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நிலக்கண்ணிவெடிகள் மற்றும் யுத்த பிரதேசத்தில் எஞ்சிய வெடி பொருட்கள் என்பவற்றினால் சுமார் 3,000 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கு மேலதிகமாக நிலக்கண்ணி வெடிகளைத் தவிர்த்தல் பற்றிய ஒட்டாவா சமவாயத்தில் தரப்பொன்றாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் தேவைப்படும் உதவியினை வழங்குவதற்கு அரசாங்கமானது அர்ப்பணிப்புடன் உள்ளது. சுமார் 1,302 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் பரவியிருந்ததன் காரணமாக அபாயகரமானதென ஐயம்கொண்ட பிரதேசங்களிலிருந்து 25 சதுர கிலோ மீற்றர்கள் தவிர மீதி பரிசோதனை செய்யப்பட்டு நிலக்கண்ணி வெடியற்ற பிரதேசமாக மாற்றுவதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை சர்வதேச ரீதியில் மெச்சப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையை நிலக்கண்ணிவெடியற்ற நாடாக மாற்றும் பொருட்டு நிலக்கண்ணி வெடிகள் இருக்குமென சந்தேகிக்கப்படும் பிரதேசங்களிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை அகற்றுதல் மற்றும் அவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல் என்பன பொருட்டு நிலக்கண்ணி வெடிகள் பற்றி செயலாற்றும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.