• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இருதய நோயாளர்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து ஊசிகளை கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு இணங்க, இருதய நோயாளர்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் வெவ்வேறுபட்ட வகையான 690,000 Enoxaparin Sodium தடுப்பூசிகளை சீனாவின் Shenzhen Techdow Pharmaceutical Co. Ltd. நிறுவனத்திடமிருந்து 1.82 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தொகைக்கு கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.