• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வௌியேறும் முனைய கட்டடத்தில் குளிரூட்டல் பொறித் தொகுதியறையில் வசதிகளை பதிலீடு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு இணங்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வௌியேறும் முனைய கட்ட டத்தில் 2KK1 ஆம் இலக்க குளிரூட்டல் பொறித்தொகுதியறையில் பயன்பாட்டு கருவிகளான குளிரூட்டிகள், குளிரூட்டி கோபுரம், பம்பிகள் மற்றும் குழாய்கள் என்பவற்றை பதிலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s.Softlogic Retail (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.