• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வௌியேறும் முனையத்தில் பணம் மாற்றும் கருமபீடங்களை நடாத்தி செல்லுதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு இணங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வௌியேறும் முனையத்தில் பணம் மாற்றும் கருமபீடங்களை நடாத்தி செல்வதற்கான ஒப்பந்தத்தை மூன்றுவருட காலத்திற்கு சம்பத் வங்கிக்கும் இலங்கை வங்கிக்கும் M/s Thomas Cook Lanka (Pvt) Ltd., நிறுவனத்திற்கும், கொமர்சல் வங்கிக்கும் ஹட்டன்நெசனல் வங்கிக்கும் கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.