• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணத்திலிருந்து பொன்னாலை வரை யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை (AB21) வீதியை புனரமைத்து மேம்படுத்துதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு இணங்க, திறமுறை நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் துணைக் கருத்திட்டமொன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து பொன்னாலை வரையான யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை (AB21) வீதியின் வழியே 1.83 கிலோ மீற்றரிலிருந்து 14.6 கிலோ மீற்றர் வரையான வீதிப் பிரிவை புனரமைத்து மேம்படுத்துவதற்கான சிவில்வேலை ஒப்பந்தத்தை M/s Sierra Construction (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.