• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் தெற்கு கட்டம் II - ஒன்றிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
- நாச்சதூவ, தலாவ, ரம்பாவ, மிஹிந்தலை, திரப்பன, குடாநகரய, அநுராதபுரம் நகரத்தின் சில பிரதேசங்கள் நுவரகம்பலத்த மத்தி மற்றும் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகள் ஆகியவற்றில் வசிக்கும் மக்கள் நன்மையடையும் முகமாக அநுராதபுரம் தெற்கு கட்டம் II - ஒன்றிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்தை அமுலாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த நோக்கத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, நாச்சதூவ குளத்திலிருந்து தேவையான நீரை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இக்கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாச்சாதூவ துருவில்ல வரை 33,500 கனமீற்றர் கொண்ட கொள்ளளவுடன் கூடிய புதிய நீர் சுத்திகரிப்பு பொறித்தொகுதியொன்றையும், ஒன்பது சேமிப்பு தாங்கிகளையும் ஆறு நீர்த்தொட்டிகளையும், வழங்கல் முறைமையையும் மற்றும் நீரை கடத்தும் இணைப்பொன்றையும் 16,936.06 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டைக் கொண்டு நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்படப்டுள்ளது. அதற்கிணங்க, தேவையான மதிப்பீடுகளைச் செய்யும் பொருட்டு பெறுகை குழுவொன்றை நியமிப்பதற்கு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.