• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தி மேற்பார்வை செய்யப்படும் நிறுவனங்களில் தடயவியல் கணக்காய்வொன்றை நடாத்துதல்
- புலனாய்வு செய்து விசாரணை செய்யும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை மத்திய வங்கி தொடர்பில் செய்யப்பட்ட சிபாரிசுகளையும் திறைசேரி முறிகளின் வழங்கல் மீதான தீர்மானம் எடுத்தல் செய்முறை தொடர்பான அறிக்கையையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கை மத்திய வங்கியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தடயவியல் கணக்காய்வொன்றை நடாத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த நோக்கம் கருதி சருவதேச அனுபவம் கொண்ட பொருத்தமான நிறுவனமொன்றின் சேவையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.