• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கல்வி பரிசோதனை சேவை நிறுவனத்தை நிறுவுதல்
- தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் கல்வி செயற்பாட்டின் தர மேம்பாட்டினை நோக்காக கொண்டு புதிய பரிசோதனை மற்றும் மதிப்பிடல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதற்காக கல்வி சார் சகல தரப்பினரினதும் பொறுப்புக்கூறல் உட்பட பொறுப்புகளை உறுதிசெய்யும் பொருட்டு "கல்வி பரிசோதனை சேவை" என்னும் பெயரில் கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனமொன்றை தாபிப்பதற்காகவும் அதனை மாகாண மற்றும் துணை நிறுவன மட்டத்தில் தாபிப்பதற்கும் கல்வி பரிசோதனை சேவையினால் மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்புகளை பகுப்பாய்வு செய்து பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக சுயாதீன "கல்வி தராதர சபையொன்றை" தாபிப்பதற்கும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.