• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதிமன்றங்களின் வசதிகளை மேம்படுத்துதல்
- நீதிமன்ற பணிகள் அதிகரித்தல், இதற்காக பயன்படுத்தப்படும் கட்டடங்களில் போதுமான இட வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களினால் நீதிமன்றங் களின் வசதிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் வலபனை மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டடத்தை நிர்மாணித்தல், நாரம்மல சுற்றுலா நீதிமன்ற அலுவலக கட்டடத்தை விரிவுப்படுத்துதல், வாகரை மற்றும் தெல்கொட சுற்றுலா நீதிமன்ற கட்டடங்களை நிர்மாணித்தல், அக்கறைப்பற்று மற்றும் பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்றங்களினதும் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினதும் சாட்சி பொருட்கள் அறை உட்பட ஆவண காப்பகம் என்பவற்றை நிர்மாணித்தல், சிலாபம் மாவட்ட நீதிபதிக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை நிர்மாணித்தல் என்பன திட்டமிடப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்தி பணிகள் 2020 - 2022 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் 592.86 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் மேற்கொள்ளும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.