• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முன் பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மீதான தேசிய கொள்கை - 2018
- 2004 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முன் பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மீதான தேசிய கொள்கையானது உள்நாட்டிலும் அதேபோன்று சர்வதேச ரீதியிலும் நிகழும் சம்பவங்கள் மற்றும் நிலைமைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இற்றைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக 2018 முன் பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மீதான தேசிய கொள்கையானது அமைச்சரவைக்கு இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இதன் பொருட்டு பல்வேறுபட்ட துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் முன்வைக்கப்பட்ட அவதானிப்புரைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மேலும் இற்றைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு அமைவாக திருத்தப்பட்டுள்ள 2018 முன் பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மீதான தேசிய கொள்கையானது உரிய திறமுறை திட்டமொன்றுக்கு அமைவாக தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராமிய மட்டங்களில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.