• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்திற்கான திருத்தம்
- இலங்கை மத்திய வங்கிக்குரிய சட்டங்களை அபிவிருத்தியடைந்த சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக இற்றைப்படுத்துவதற்கான மறுசீரமைப்பிற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை மத்திய வங்கிப் பணிகள் சார்பில் தற்போது அமுலிலுள்ள 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டம் சம்பந்தமாக பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் நிதிச் சபையுடனும் உரிய சகல தரப்பினர்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது. புதிய நெகிழ்ச்சிமிக்க பணவீக்கத்தினை குறியிலக்காகக் கொள்ளும் நாணய கொள்கை கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துதல் இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ கட்டமைப்பிற்குள் நல்லாட்சி தரங்களை விருத்தி செய்தல், தகவல்களை வௌிப்படுத்தும் பல தேவைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் இலங்கை மத்திய வங்கி நாட்டின் பேரின இடர் நேர்வுகளை தவிர்க்கும் அதிகாரபீடமாக அறிந்துக் கொள்தல் போன்ற திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். இதற்கமைவாக, 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தினை மீளக் கட்டமைக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.