• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2563 ஆவது ஶ்ரீ புத்த வருடத்தின் அரசாங்க வெசாக் விழாவை நடாத்துதல்
- 2563 ஆவது ஶ்ரீ புத்த வருடத்தின் அரசாங்க வெசாக் விழாவை 2019 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதியன்றும் வெசாக் முழுமதி போயா தின நிகழ்ச்சியை 2019 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியன்றும் காலியிலுள்ள ஹிக்கடுவ தெல்வத்தையிலுள்ள தொட்டகமுவ புராதான இரத்பத் இரஜ மகா விஹாரையை மையப்படுத்தி அரச அனுசரணையுடன் நடாத்து வதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைபவத்துடன் ஒத்திசைவாக, காலி மாவட்டத்தில் அமைந்துள்ள விஹாரைகளின் பௌதிக அபிவிருத்திக்கான நிகழ்ச்சித்திட்டமொன்றையும், ஆன்மீக விருத்தியுடன் பண்பட்ட போதைப் பொருளற்ற சமூகமொன்றை உருவாக்குவதற்கான ஆன்மீக நிகழ்ச்சித்திட்டங் களையும் சிறந்த பொருளாதாரமொன்றையும் புத்த தருமத்தின் மூலம் பண்பட்ட இலக்கியம் மற்றும் கலைகளில் விழிப்புணர்வொன்றையும் உருவாக்குவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2019 அரசாங்க வெசாக் விழாவை காலியிலுள்ள ஹிக்கடுவ தெல்வத்தை யிலுள்ள தொட்டகமுவ புராதான இரத்பத் இரஜ மகா விஹாரையை மையப்படுத்தி நடாத்துவதற்கும், 2019 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி வரையான வாரத்தை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கும், அத்துடன் அதனுடன் ஒத்திசைவாக நடாத்தப் படவுள்ள கூறப்பட்ட ஏனைய நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்கும் புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.