• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வனசீவராசிகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக வனசீவராசிகள் பாதுகாப்பு மதியுரைக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்தல்
- சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சின் விடயப் பரப்பின் கீழ்வரும் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு பாதுகாப்பு பிரதேசங்களிலும் அதேபோன்று அவற்றின் புறத்தேயும் வாழும் அருகிவரும் வன விலங்குகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துதல், தேசிய வனசீவராசிகள் கொள்கை மற்றும் சட்டம் என்பவற்றை அமுல்படுத்துதல், வனசீவராசிகள் பாதுகாப்பு சுற்றாடல் கொள்கையினை அமுல்படுத்துதல், வனசீவராசிகள் வளங்களின் பாதுகாப்பு மற்றும் மனித - யானை மோதல்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற பணிகள் குறித்தொதுக்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சின் விடயநோக்கெல்லையின் கீழ்வரும் தாவரவியல் பூங்கா திணைக் களத்திற்கு பேராதனை ரோயல் தாவரவியல் பூங்கா உள்ளடங்கலாக சில தாவரவியல் பூங்காக்களின் முகாமைத்துவமும் அபிவிருத்தியும் பொறுப்பளிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த அமைச்சின் தேசிய மிருககாட்சிசாலைகள் திணைக்களமானது தெஹிவலை மிருககாட்சிசாலை, பின்னவல யானைகள் சரனாலயம், பின்னவல புதிய மிருககாட்சிசாலை மற்றும் அம்பாந்தோட்டை சபாரி பூங்கா என்பவற்றின் முகாமைத்துவத்தை மேற்கொள்கின்றது.

அதற்கிணங்க, வனசீவராசிகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 70(I) ஆம் பிரிவிற்கேற்ப, கூறப்பட்ட தொழிற்பாடுகள் தொடர்பில் அமைச்சருக்கு மதியுரை வழங்கும் நோக்கம் கருதி, உரிய துறையிலுள்ள நிபுணர்களை உள்ளடக்கிய மதியுரைக் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.