• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிகஷ்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்து வசதிக்காக பாதுகாப்பான நடைப் பாலங்களை அறிமுகப்படுத்துதல்
- போக்குவரத்துக்காக பாதுகாப்பு முறைகள் பயன்படுத்தப்படாத பாதுகாப்பற்ற மரப்பாலங்கள், தொங்கு பாலங்கள் அல்லது அத்தகைய ஏதேனும் அமைவிடங்களாகவுள்ள, பிரதேச செயலகப் பிரிவு மட்டத்திலுள்ள அதிகஷ்ட பிரதேசங்களிலுள்ள இனங்காணப்பட்ட அமைவிடங்களில், தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் அபிவிருத்தி செய்யப்படும் 1,000 பாதுகாப்பான நடைப் பாலங்களை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பு 2020-2022 இற்குள் தேவையான நிதியங்களை பெற்று, கூறப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில், அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.