• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இயந்திர - இலத்திரனியல் துறையின் அபிவிருத்தி மூலம் பொருளாதாரத்தை வலுவூட்டல்
- இயந்திர - இலத்திரனியலை அடிப்படையாகக் கொண்ட செயற்பாட்டு பொருளாதார அபிவிருத்தி முயற்சியின் கூறுகளில் ஒன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்ட "Enterprise SriLanka நிகழ்ச்சித்திட்டத்தின்" கீழ் நீண்டகால கடன் வசதியை வழங்குவதற்கான பிரேரிப்புக்கு அமைச்சரவையானது அதன் அங்கீகாரத்தை ஏற்கனவே வழங்கியுள்ளது.

அதற்கிணங்க, பிரேரிக்கப்பட்ட கருத்திட்டத்திற்கூடாக அடையப்படக்கூடிய நன்மைகளை கருத்திற்கொண்டு, அதனுடன் இன்னுமொரு கூறாக இனங்காணப்பட்ட நியமப்பயிற்சி, மூலமுன்மாதிரி மற்றும் பரிசோதனை வசதி உள்ளடங்கலாக பிரேரிக்கப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக்கொள்வதற்காக விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில், அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.