• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடல்கள் அல்லது இசை ரீதியிலான ஆக்கங்களின் உரிமையாளர்களுக்கு உரிமைத் தொகையினை செலுத்துவதற்கான ஒழுங்குவிதிகள்
- 2018 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க புலமைச்சொத்து (திருத்த) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச்சொத்து சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப, பாடல்கள் அல்லது இசை ரீதியிலான ஆக்கங்களின் உரிமையாளர்களுக்கு அல்லது அத்தகைய உரிமையாளர்கள் உறுப்புரிமையைக் கொண்டுள்ள கூட்டு சங்கங்களுக்கு அத்தகைய படைப்புகளின் பதிப்புரிமை மற்றும் தொடர்புபட்ட உரிமைகளுக்காக உரிய உரிமைத் தொகை செலுத்தப்படவேண்டும். எவ்வாறாயினும் வர்த்தக நோக்கங்களுக்காக அவற்றை பயன்படுத்துபவர்களினால் பாடல்கள் அல்லது இசை ரீதியிலான ஆக்கங்களின் உரிமையாளர்களுக்கு உரிமைத்தொகை கொடுப்பனவுகள் இன்னமும் செலுத்தப் படுவதில்லை என்பது இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், உரிமைத்தொகை கொடுப்பனவு பொறிமுறையை ஒழுங்குமுறைப்படுத்தும் பொருட்டு உரிமைத்தொகை கொடுப்பனவுகளாக திட்டவட்டமான குறைந்தபட்ச கட்டணங்களை விதித்துரைத்து 2011 01 05 ஆம் திகதியிடப்பட்டதும் 1687/28 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க புலமைச்சொத்து ஒழுங்குவிதியை இரத்துச் செய்வதன் மூலம் 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச்சொத்து சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை வௌியிடுவது கூடுதல் பயனுறுதி வாய்ந்ததாக அமையுமென்று கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால், இது குறித்து சட்டவரைநரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு, விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரினால் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.