• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சில்ப சேனா' கண்காட்சி - இலங்கையில் தொழினுட்ப புரட்சி
- அரச நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்படும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளடங்கலாக ஆராய்ச்சி வணிகமயமாக்கத்திற்கான அடித்தளமொன்றை உருவாக்குதல் மற்றும் தொழினுட்ப மாற்ற அபிவிருத்திக்கு உதவுதல் பற்றிய பிரதான குறிக்கோளுடன் 'சில்ப சேனா - இலங்கையில் தொழினுட்ப புரட்சி' என அழைக்கப்படும் மாவட்ட மட்டத்திலான கண்காட்சியை நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசாங்க ஆராய்ச்சி நிறுவகங்களினால் ஏற்கனவே விருத்தி செய்யப்பட்ட குறைந்த செலவைக் கொண்டதும் நவீனத்துவமிக்கதுமான தொழினுட்பங்களை உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கும் தொழில்முயற்சியாளர்களுக்கும் அறிமுகப்படுத்து வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சியை சகல மாவட்டங்களிலும் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதி அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, அரசாங்க ஆராய்ச்சி நிறுவகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக அரசாங்க நிறுவனங்களின் பங்களிப்பானது இந்த நோக்கம் கருதி கோரப்படுகின்றது. அதற்கிணங்க, விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில், பல்வேறுபட்ட அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் மூலம் நடாத்தப்படவுள்ள இதையொத்த கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களுடனும் ஒத்திசையுமாறு இந்த 'சில்ப சேனா' கண்காட்சியை நடாத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.