• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வலுவூட்டல் தொடர்புபட்ட விசேட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
- தற்போது, இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சமூகமானது மொத்தச் சனத்தொகையின் 15 சதவீதத்தினை விஞ்சியுள்ளமை வௌிப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால், அதன் மூலம், அவர்கள் முகங்கொடுக்கும் சமத்துவமின்மைகளை குறைக்கும் அதேவேளை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு அவர்களுக்குத் தேவைப்படும் வசதிகளை வழங்குவதன் மூலம் இன்னொருவரில் தங்கியிராமல் கௌரவமாக வாழ்வதற்குகம் நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களை பங்குகொள்ள செய்வதற்குமான நிகழ்ச்சித்திட்டமொன்றை விருத்தி செய்வதற்கான தேவைப்பாடு எழுந்துள்ளது. இதன் மீது கவனத்தைச் செலுத்தி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வலுவூட்டல் தொடர்புபட்ட விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, பொது பொழுதுபோக்குகள் மற்றும் வசதிகளின் பாவனை அத்துடன் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலில் சமத்துவத்தை உறுதிப்படுத்துதல் அத்துடன் முழு சமுதாயத்திற்குள்ளும் கணக்கெடுப்பு, ஆராய்ச்சி மற்றும் கொள்கை வகுப்பு துறைகளிலும் அவர்களை வேற்றுமையாக நடாத்தாமல் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளைக் கொண்ட சூழமைவில் அவர்களை வலுவூட்டுதல் பற்றி சமூகத்திற்கு அறியச் செய்வதன் மீதும் கவனத்தினைச் செலுத்தி, சகல அக்கறைதாரர்களுடனும் இணைந்தும் ஒருங்கிணைந்தும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சமூகத்தினை வலுவூட்டும் பொருட்டு சனாதிபதி செயலகத்தினால் கூட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.