• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பஸ்நாகொட நீர்த்தேக்க கருத்திட்டத்தின் பொறியியல், கொள்வனவு மற்றும் நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை வழங்குதல்
- கம்பஹா, அத்தனகல்ல, மினுவன்கொடை மற்றும் மீரிகம பிரதேசங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கைத்தொழிலுக்குத் தேவையான நீர் வழங்கும் பொருட்டு தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் கீழ் செயற்படுத்தப்படும் கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவன்கொடை ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் பகுதியொன்றாக பஸ்நாகொட நீர்த்தேக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.
அத்தனகலுஓயாவின் கிளை ஆறொன்றான பஸ்நாகொட ஓயாவுக்கு குறுக்காக அணையொன்றை கட்டி பஸ்நாகொட நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது 20.5 மீற்றர் உயரமும் 130 மீற்றர் நீளமும் கொண்ட கொங்கிறீட் அணையுடனான 3.5மில்லியன் கன மீற்றர் நீர் கொள்ளளவை தேக்கி வைத்துக் கொள்ளக்கூடியவாறு நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் பொறியியல் கொள்வனவு மற்றும் நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2,347.4மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு Sinohydro Corporation Limited நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.