• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலகுரக புகையிரத போக்குவரத்து கருத்திட்டத்திற்கான மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
- மாலபேயிலிருந்து கோட்டை வரை நிர்மாணிக்கப்படவுள்ள இலகுரக புகையிரத போக்குவரத்து கருத்திட்டத்தின் திட்டமிடல் பணிகள், கேள்வி உதவிகள், நிர்மாணிப்புகள், மேற்பார்வை மற்றும் கருத்திட்ட முகாமைத்துவம் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் Oriental Consultants Globale Co. Ltd., Jappan International Consultants for Transportation Co. Ltd., Chodai Co. Ltd., Nippon Koei Co. Ltd. மற்றும் இலங்கை Consulting Engineers & Architects Associated (Pvt.) Ltd. ஆகிய நிறுவனங்களின் கூட்டு தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.