• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய மக்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டங்களை விருத்தி செய்வதற்கான கருத்திட்டத்தின் மதியுரை ஒப்பந்தத்தை வழங்குதல்
- வளர்ச்சி பெற்றுவரும் கிராமிய பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம் வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் அபிவிருத்தியினை குறியிலாக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் கீழ் கிராமிய வீதிகள், மத்திய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசனங்கள் மற்றும் குடிநீர் வசதிகள் வழங்குதல் போன்ற அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதன் மூலம் பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதே போன்று இதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல், பிரதேச அபிவிருத்தி ஏற்றத் தாழ்வுகளை குறைத்தல் மற்றும் மக்களின் வறுமை நிலைமையை ஒழிப்பதற்கு பங்களிப்பு நல்கும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தின் இரணடாவது ஆக்கக்கூறாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிராமிய மக்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டத்தை விருத்தி செய்வதற்கான கருத்திட்டத்தின் மதியுரைச் சேவையை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் Ceywater Consultants (Pvt.) Ltd நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.